டிரம்பிற்கு அதிகரித்து வரும் ஆதரவு

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர் தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பும் முக்கிய மாநிலங்களில் கடைசிநேர பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.

வெள்ளிக்கிழமை வெளிவந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் டிரம்பைக் காட்டிலும் ஹில்லரி 5 விழுக்காடு முன்னிலையில் இருந்த போதிலும் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய மாநிலங்களில் அவ்விருவருக்கும் இடையே போட்டி கடுமையாகவே உள்ளது.

பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஒஹையோ, பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அண்மையில் அவருக்கு ஆதரவு கூடிவருவதை கருத்துக் கணிப்புகள் புலப்படுத்துகின்றன. படம்: ஏஎஃப்பி

முழு விவரம்: அச்சுப்பிரதியில்