தலைக்குமேல் காத்திருந்த ஆபத்து

டோரியான் நகரிலிருந்து கடந்த ஞாயிறன்று மெக்சிகோ சிட்டிக்குச் சென்ற ஏரோமெக்சிகோ விமானத் தில் சென்ற பயணிகள் பலரும் நடு நடுங்கிப் போயினர். அழையா விருந்தாளியாகப் பாம்பு ஒன்றும் விமானத்தில் இருந் ததுதான் அதற்குக் காரணம். பயணிகள் தங்களது கைப்பை களை வைக்கும் மேற்பகுதியில் இருந்து மெல்ல ஊர்ந்து கீழிறங்கி யது மூன்றடி நீளம் கொண்ட அந்தப் பச்சைப் பாம்பு. அதைக் கண்ட அதிர்ச்சியில் அருகிலிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் அவசர அவசரமாகத் தங்களது இருக்கை வார்களைக் கழற்றிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர். பின், விமானச் சிப்பந்தி ஒருவர் தந்த போர்வைகளைப் பாம்பு மீது போட்டு மூடி, எங்கும் நகராமல் பார்த்துக்கொண்டனர். பிறகு விலங்குக் கட்டுப் பாட்டு ஊழியர்கள் விமானத்தில் நுழைந்து பாம்பைப் பிடித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!