கருத்துக் கணிப்புகளை மிஞ்சி டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரியே வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் கூறின. தேர்தல் நெருங்கிய வேளையில் வெளிவந்த சில கருத்துக் கணிப்பு களிலும் டிரம்பைக் காட்டிலும் ஹில்லரியே 4 முதல் ஐந்து விழுக்காடு வரை முன்னணியில் இருந்தார். இத்தேர்தலில் ஹில்லரியே வெற்றி பெறுவார் என சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் கருத்துக் கணிப்புகள் கூறி வந்தன. ஹில்லரி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சிஎன்என் முன்னுரைத்திருந்தது.

அத்தனை கருத்துக் கணிப்பு களையும் பொய்யாக்கும் விதமாக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஊடகங்கள் அனைத்தும் ஹில்லரிக்கு ஆதரவாக செயல் படுவதாக தேர்தலுக்கு முன்னர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

50 அடி ஆழத்தில் மழைநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு இந்திய தொழிலாளர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். மாதிரிப்படம்: ஊடகம்

14 Nov 2019

ஆறு இந்திய ஊழியர்கள் மரணம்; ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அருகே புதர்த் தீ வேகமாகப் பரவி வரும் வேளையில், இந்த மாது தமது மகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுகிறார். படம்: இபிஏ

14 Nov 2019

புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியாவின் ‘ரோக் யுகேஸ்’ இசைக்குழுவின் கித்தார் கலைஞர் அகேல் ஸைனல். படம்: மலேசிய ஊடகம்

14 Nov 2019

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டதாக தகவல்