டிரம்ப்புக்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் வெற்றிப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த டோனல்ட் டிரம்ப் கொண்டாட்டங் களை ஒதுக்கிவைத்து பதவி ஏற்புக்கு ஆயத்தமாகி வருகிறார். முக்கிய பொறுப்புகளை உடனடியாக நிரப்பவும் அவர் உறுதி பூண்டுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட் டங்கள் நடந்துள்ளன. தேர்தல் பிரசாரத்தில் குடி யேறிகள், முஸ்லிம்கள், பெண்கள் ஆகியோருக்கு எதிராக டிரம்ப் கருத்து கூறியதை சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 'டிரம்பை அதிபராக ஏற்க மாட்டோம்' என்று முழக்கமிட்டனர்.

நியூயார்க்கில் திரண்ட ஆயிரக் கணக்கானோர் டிரம்புக்கு எதிராக முழக்கமிட்டு அவரைச் சாடும் வாசகங்களைக் கொண்ட பதாகை களை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் டிரம்ப் டவரை நோக்கிச் சென்றனர். மேன்ஹாட்டன் பூங்காவில் திரண்ட ஏராளமானவர்கள் டிரம்பை அதிபராக ஏற்கப் போவ தில்லை என்று கூறினர்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்புக்கு தயாராகிவரும் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. 'டிரம்ப் என்னுடைய அதிபர் அல்ல', 'டிரம்ப்பை வெறுக்கிறேன்', 'டிரம்ப் ஆபத்தானவர்' உட்பட பல வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!