மகாதீர்: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியை நேரடிப் போட்டியில் எதிர்கொள்ள வேண் டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அறை கூவல் விடுத்துள்ளார். மலேசிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே கட்சியாக, ஒரே சின்னத்தின்கீழ் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று மூன்று கட்சிகள் அடங்கிய கூட்டணியின் தேசிய மாநாட்டில் நேற்று அவர் கலந்துகொண்டு பேசினார். “நமது நோக்கம் பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்று வது. அதற்கு நாம் ஓரணியில் திரள வேண்டும். “நம்மால்தான் நஜிப் ரசாக்கை தடுத்து நிறுத்த முடியும். நாட்டில் ஜனநாயகத்தை சீர்திருத்தி அமைப் பதே நமது விருப்பம்,” என்று அவர் கூறினார்.

 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது. படம்: ஓங் கியான் மிங்/ஃபேஸ்புக்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்