தென்கொரியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம்

தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹை பதவி விலகக் கோரி வலியுறுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சோல் நகரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை சென்றடைவதைத் தடுக்க ஏராளமான போலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் என்பவர் அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களைப் பெற திருவாட்டி பார்க் அனுமதித்ததாக அதிபர் மீது புகார் கூறப்படுகிறது. சோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். படம்: ஏஎஃப்பி