ஒபாமாவின் சுகாதாரத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை ஏற்க டிரம்ப் விருப்பம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், தற்போதைய அதிபர் ஒபாமாவின் சுகாதார கவனிப்புத் திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை தக்க வைத்துக் கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார்.

அத்திட்டத்தில் தான் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள விரும்பும் சில பகுதிகள் மிக வலுவான சொத்துகள் என்று திரு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். திரு ஒபாமாவின் சுகாதார கவனிப்பு திட்டத்தில் இரு தூண்களாகக் கருதப்படும் இரண்டு அம்சங்கள் தமக்கு மிகவும் பிடித்திருப்பதாக திரு டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை திரு ஒபாமாவை திரு டிரம்ப் சந்தித்துப் பேசியபோது அந்த சுகாதாரத் திட்டம் பற்றி இருவரும் கலந்து ஆலோசித் ததாகத் தெரிகிறது. அதன் பின்னர் சிபிஎஸ் நிறுவனத்திற்கு திரு டிரம்ப் அளித்த தனிப்பட்ட பேட்டியில் ஒபாமாவின் சுகாதார கவனிப்புத் திட்டத்தில் சில அம்சங்களை புதிய திட்டத்தில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்ற திரு டிரம்பிற்கு எதிராக நியூயார்க்கில் தொடர்ந்து நடக்கும் ஆர்ப்பாட்டங்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!