மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளின் அட்டூழியம்

பாக்தாத்: மோசுல் நகரில் ஐஎஸ் குழுவினரின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்தது. ஐஎஸ் போராளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்களில் 40 பேரைக் சுட்டுக் கொன்றதாகவும் அவர் களின் சடலங்களை மின் கம்பங் களில் தொங்கவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 40 பேரும் தேச துரோக செயலில் ஈடுபட்டதாக ஐஎஸ் குற்றம் சாட்டியுள்ளது. மோசுல் நகரில் வசிக்கும் மக்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த ஐஎஸ் தடை விதித்துள்ளது. அத்தடையை ஒருவர் புறக்கணித்ததற்காக பொது இடத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்