டிரம்ப் பற்றிய பேச்சுவார்த்தை: பிரிட்டிஷ், பிரெஞ்சு அமைச்சர்கள் புறக்கணிப்பு

பிரசல்ஸ்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பின் வெற்றி குறித்த பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி யுறவுக் கொள்கைளுக்கு தலை மைப் பொறுப்பேற்றிருக்கும் ஃபெடரிக்கா மொகேரினி நேற்று கூட்டிய கூட்டத்தை பிரிட்டிஷ், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

இது புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் அமெரிக்க அதிபரிடம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறை குறித்து ஒன்றிய நாடு களிடையே நிலவும் கருத்து வேறு பாட்டை பிரதிலிப்பதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள கடப் பாடு குறித்து திரு டோனல்ட் டிரம்ப் தமது தேர்தல் பிரசாரத்தின் போது கேள்விகள் எழுப்பியிருந் தார்.

ஆனால், இந்தப் பேச்ச்வார்த்தை பல்லாண்டு காலமாக ஐரோப்பிய நாடுகளின் நட்பு நாடாக விளங்கி வந்துள்ள அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல் முடிவை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு ஈடாகும் என்ற எண்ணம் காரண மாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!