பாகிஸ்தான் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடிப்பு: குறைந்தது 52 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஷா நூரானி வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது 52 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழு பொறுப் பேற்றுக்கொண்டுள்ளது. அந்தக் குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதல் என்று கூறப்படுகிறது.

குவெட்டா நகரிலிருந்து 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த வழிபாட்டுத் தலத்தில் சுமார் 500 பேர் சனிக்கிழமை கூடியிருந்தபோது அத்தலத்தின் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாகவும் அந்த குண்டு வெடிப்பில் பக்தர்கள் பலர் உயிரிழந்ததாகவும் மாநில உள்துறை அமைச்சர் சர்ஃபிராஸ் புக்டி கூறினார்.

பாகிஸ்தானின் குவெட்டா நகருக்கு அருகே உள்ள வழிபாட்டுத் தல வளாகத்தில் குண்டு வெடித்தபோது உயிர் தப்பிய பக்தர்கள் அருகில் உள்ள ஓரிடத்தில் தங்கியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!