மலேசியா: எதிர்க்கட்சி எம்பி ரஃபிசி

ரம்லிக்கு 18 மாதச் சிறை கோலாலம்பூர்: மலேசியாவில் 1எம்டிபி நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையின் 98வது பக்கத்தை அனுமதியில்லாமல் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது ரஃபிசி ரம்லிக்கு நீதிமன்றம் 18 மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சிலாங்கூர், பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரான ரஃபிசி ரம்லி மீது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1972 கீழ் குற்றம் சாட்டப் பட்டிருந்தது. கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒராண்டுக்கும் மேல் சிறைத் தண்டனை அல்லது 2000 ரிங்கிட்டிற்கும் அதிகமான அபராதத் தொகை விதிக்கப் பட்டால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார். இதனால் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ரம்லி போட்டியிட முடியாது.