டிரம்ப் நிர்வாகக் குழுவில் இருவருக்கு முக்கிய பொறுப்புகள்

நியூயார்க்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் தமது நிர்வாகக் குழுவில் இருவருக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுத் துள்ளார். விரைவில் அமைக்கப்பட இருக்கும் புதிய நிர்வாகத்தின் செயல் திட்டத்தை செயல்படுத்த தனது இரு முக்கிய ஆலோச கர்களை திரு டிரம்ப் நியமித் துள்ளார். குடியரசுக் கட்சியின் தேசிய குழுவின் தலைவரான ரைன்ஸ் பிரீபஸ், வெள்ளை மாளிகை உயர் தலைமை அதிகாரியாக செயல் படுவார். யுத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவராக ஸ்டீபன் பேனன் நியமிக்கப்பட்டுள்ளார். திரு பேனன் வலதுசாரி கருத்துகளால் நன்கு அறியப்பட்ட பிரைட்பார்ட் நியூஸ் என்ற இணையத்தள நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

திரு டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பின்னர் அவரது செயல் திட்ட உயர் அதிகாரியாக திரு பேனன் செயல்படுவார். தற்போதைய அதிபர் ஒபாமா பதவி விலகியதும் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக 70 வயது டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்பார். "அமெரிக்காவை வழிநடத்த எனது வெற்றிகரகான குழுவை தொடர்ந்து என்னுடன் வைத் திருக்க விரும்புகிறேன்," என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.

ரைன்ஸ் பிரீபஸ், ஸ்டீபன் பேனன். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!