நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள்

வெல்லிங்டன்: நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிறைஸ்ட்சர்ச் நகரை இரு நிலநடுக்கங்கள் உலுக்கியுள்ளன. அந்நகரின் வடகிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து நேற்று காலை அப்பகுதியை 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக் கியதாகவும் புவியியல் ஆய் வாளர்கள் தெரிவித்தனர்.

முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தின்போது குறைந்தது இருவர் உயிரிழந்ததாகக் கூறப் பட்டது. அத்துடன் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் அவை சேதம் அடைந்தன. நில நடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல சாலைகள் பழுதடைந்தன. பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியுற நேர்ந்ததாக அதி காரிகள் கூறினர். கிறைஸ்ட்சர்ச் நகரிலிருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் நியூசிலாந்தின் தெற்குத் தீவுக்கு அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெடிப்பைப் பார்த்து பிரமித்து நிற்கும் குடியிருப்பாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!