ஹாங்காங் நீதிமன்றம்: ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிழந்தனர்

ஹாங்காங்: ஹாங்காங்கில் இரண்டு ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி இழந்துவிட்டதாக ஹாங்காங் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிக்ஸ்டஸ் லியூங் சுங் ஹாங், 30, யாவ் வாய் சிங், 25 ஆகிய இருவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்ததால் சட்டமன்றத்திற்குச் செல்லும் தகுதியை இழந்துள்ளனர் என்று நீதிபதி தாமஸ் ஹாவ் தமது தீர்ப் பில் கூறினார். அவர்கள் இருவரும் 'யங்ஸ்பிரேஷன்' கட்சி சார்பாக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த இரண்டு அரசியல்வாதி களும் 'யங்ஸ்பிரேஷன்' கட்சியைச் சேர்ந்தவர்கள். அத்துடன் சீனாவை அவமதிக்கும் வகையில் 'ஹாங்காங் என்பது சீனா அல்ல,' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர். நீதிமன்றம் உத்தரவு குறித்து கருத்து கூறிய யாவ், "இது எதிர் பார்க்கப்பட்டதுதான்," என்றார்.

லியூங் சுங் ஹாங்கும் (இடம்), யாவ் வாய் சிங்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!