‘பொக்கிபால்ஸ்’ வடிவில் போதை மாத்திரைகள்

ஜார்ஜ் டவுன்: ‘பொக்கிமோன்’ கைபேசி விளையாட்டில் பயன் படுத்தப்படும் ‘பொக்கிபால்ஸ்’ போன்று தோற்றமளிக்கும் ‘எக்ஸ் டசி’ போதை மாத்திரைகளை மலேசிய காவல்துறையினர் கைப் பற்றியிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு மேற் கொள்ளப்பட்ட அதிரடி சோதனை களில் ‘பொக்கிபால்ஸ்’ வடிவில் மாத்திரைகளும் பல வகையான போதைப் பொருட்களும் சிக்கிய தாக அவர்கள் கூறினர்.

இது குறித்துப் பேசிய மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரி வின் தலைவர் மெய்டு அபு பக்கர், “பொக்கிமோன் பந்துகள் வடிவில் எக்ஸ்டசி போதை மாத்திரைகள் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை,” என்றார். கைபேசி செயலியான ‘பொக்கி மோன் கோ’ விளையாட்டில் சிவப்பு, வெள்ளை நிற ‘பொக்கி பால்ஸ்’ பந்துகள் பயன்படுத்தப்படு கின்றன. அதே போன்று எக்ஸ்டசி மாத் திரைகளும் பொக்கிமோன் பந்து கள் வடிவில் தயாரிக்கப்பட்டிருந் தன.

காவல்துறை அதிகாரி ஒருவர், ‘பொக்கிபால்ஸ்’ வடிவில் இருந்த போதை மாத்திரைகளைக் காட்டுகிறார். படம்: ஸ்டார் காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடியது. படம்: இணையம்

19 Nov 2019

அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்