பெர்சே பேரணியில் கலந்துகொள்ள மக்களுக்கு மகாதீர் அழைப்பு

கோலாலம்பூர்: பெர்சே அமைப்பு வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள பேரணியில் மக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார். முதல் முறையாக மஞ்சள் நிற பெர்சே உடை அணிந்திருந்த திரு மகாதீர், மலேசியர்கள் அனைவரையும் பேரணிக்குத் திரண்டு வருமாறு வலியுறுத்தி ஒரு காணொளியில் பேசியுள்ளார். பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவரின் முகநூல் பக்கத்தில் அந்த காணொளி விவரம் வெளிவந்துள்ளது. "பிரதமர் நஜிப்பால் நாடு பில்லியன் கணக்கில் கடனில் சிக்கியுள்ளது. இதனை கூட்டரசு அரசாங்கமும் மாநில அரசாங்கமும்கூட தீர்க்க முடியவில்லை. எனவே இந்தப் பேரணியில் கலந்து கொள்வதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான நமது அதிருப்தியை வெளிப்படுத்த முடியும் என்று திரு மகாதீர் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!