பிரேசில் காற்பந்துக் குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

மெடலின்: பிரேசில் நாட்டு காற்பந்துக் குழுவினர் உள்பட மொத்தம் 81 பேரை ஏற்றிச்சென்ற ஒரு விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த விமானத்தில் பிரேசில் காற்பந்து விளையாட்டாளர்கள் உள்பட 72 பயணிகளும் சிப்பந்தி கள் 9 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பொலிவியாவிலிருந்து கொலம் பியா வந்துகொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று கொலம்பியாவின் மெடலின் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது மலைப் பகுதி யில் விழுந்து நொறுங்கியதாக கொலம்பியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் இதுவரை 5 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் காற்பந்துக் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் அலன் ருஷல், கோல் காப்பாளர்கள் ஜாக்சன் ஃபோல்மென், டெனிலோ, பிரேசில் பத்திரிகையாளர் ஒருவர் ஆகியோர் விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் அடங்குவர்.

விமான விபத்தில் உயிர் தப்பிய பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர் அலன் ருஷல் அவசரமாக கொலம்பிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!