டோனல்ட் டிரம்ப் மீது ரோம்னி கொண்டுள்ள நம்பிக்கை

நியூயார்க்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் எடுத்து வரும் நட வடிக்கைகளைப் பார்க்கும் போது அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக திரு மிட் ரோம்னி கூறியுள்ளார். அமெரிக்காவின் சிறந்த எதிர்காலத்திற்கு திரு டிரம்ப் நம்மை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று மசாசுசெட்ஸ் முன்னாள் ஆளுநரான மிட் ரோம்னி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு திரு டிரம்பை கடுமையாகச் சாடியவர் மிட் ரோம்னி. அதிபராக வருவதற்கு டிரம்பிற்கு தகுதி இல்லை என்று கூறியிருந்த ரோம்னி, தற்போது அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். திரு டிரம்ப் தமது புதிய அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடு பட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!