ஒபாமா: அமெரிக்க அதிபர் பதவிக்கு மிஷெல் ஒருபோதும் போட்டியிடமாட்டார்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கு மிஷெல் ஒருபோதும் போட்டியிடமாட்டார் என்று அதிபர் ஒபாமா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அமெரிக்கத் தலைமகள் மிஷெல் ஒபாமா அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வேளையில் திரு ஒபாமா தன் மனைவி அதிபர் பதவிக்கு என்றுமே போட்டியிடமாட்டார் என்று கூறியுள்ளார். "மிஷெல் மிகவும் திறமையானவர் என்பது எனக்குத் தெரியும். அமெரிக்க மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் அவர். ஆனாலும் அரசியலில் அவர் இறங்க மாட்டார்," என்று திரு ஒபாமா கூறினார். அமெரிக்க மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றுள்ள மிஷெல் ஒபாமா அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வெள்ளைமாளிகையை விட்டுச் செல்வார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!