டிசம்பர் விடுமுறையில் தாக்குதல் நடத்த திட்டம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவில் செயல்பட்டு வரும் ஒரு பயங்கரவாதக் குழு டிசம்பர் விடுமுறையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக இந் தோனீசியப் போலிசார் கூறியுள் ளனர். மேற்கு ஜாவாவில் அந்த பயங்கரவாதக் குழு செயல்பட்டு வருவது இப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக தேசிய போலிஸ் படையின் பேச்சாளர் பாய் ரஃப்லி அமர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார். அக்குழுவுக்கு வெளிநாடு களிலிருந்து நிதி கிடைத்து வருவதாகக் கூறிய ரஃப்லி, எந்த நாட்டிலிருந்து நிதியை அக்குழு பெற்று வருகிறது என்பதை அறிய இந்தோனீசியப் போலிசார் அனைத்துலகப் போலிசாருடன் சேர்ந்து அணுக்கமாகப் பணி யாற்றி வருவதாகக் கூறினார். அக்குழுவின் திட்டம் பற்றியும் திரு பாய் ரஃப்லி விளக்கினார்.

ஒரு தொழிற்கூடத்தை அமைத்து போதைப்பொருளை தயாரித்து அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்துவது அக்குழுவின் திட்ட மாக இருந்தது என்று அவர் சொன்னார். இருப்பினும் அக்குழுவின் திட்டம் பின்னர் மாறியதாகவும் வெடிகுண்டு தயாரித்து அவற்றை பயன்படுத்தவும் மற்ற பயங்கர வாதக் குழுக்களுக்கு அதனை விற்கவும் அக்குழு திட்டமிட்ட தாகவும் அவர் கூறினார். மேற்கு ஜாவாவில் மஜலெங்கா பகுதியில் செயல்பட்டு வரும் அந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த நால்வரை இந்தோனீசியப் போலிசார் கைது செய்துள்ளனர்.

மேற்கு ஜாவா மஜலெங்கா பகுதியில் இந்தோனீசியப் போலிசார் அண்மையில் மேற்கொண்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங் களையும் அதற்கான ஆதாரங்களையும் தேசிய போலிஸ் படை பேச்சாளர்கள் மூவர் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் காண்பித்தனர். ஆகக் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதக் குழுவுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி கிடைத்து வருவதாக போலிஸ் படை பேச்சாளர்களில் ஒருவரான பாய் ரஃப்லி (நடுவில்) கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!