தற்காப்பு அமைச்சராக ஜேம்ஸ் மட்டிஸ் தேர்வு

நியூயார்க்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் தமது அமைச் சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள் ளார். அந்த வரிசையில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பதவிக்கு ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படைத் தளபதி ஜேம்ஸ் மட்டிஸை திரு டோனல்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார். ஈராக்கிலும் ஆப்கானிஸ் தானிலும் பணியாற்றிய திரு மட்டிஸ் போர்க்கள அனுபவம் பெற்றவர். ஒஹையோ மாநிலத்தில் நடந்த நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் உரையாற்றிய திரு டிரம்ப், அமெரிக்க தற்காப்பு அமைச்சராக ஜேம்ஸ் மட்டிஸை தாங்கள் நியமிக்கவிருப்பதாகக் கூறினர். "அவர் எங்களின் சிறந்த நண்பர்," என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

நியூ ஜெர்சியில் திரு டோனல்ட் டிரம்ப்பும் ஓய்வு பெற்ற ஜேம்ஸ் மட்டிஸும் சந்தித்துப் பேசினர். படம்: ஏஏஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!