ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மக்கள் இறுதி மரியாதை

ஹவானா: கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு நேற்று நாட்டு மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். கியூபாவில் புரட்சியை ஏற் படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்தார். அமெரிக்காவுக்கும் அவர் சவாலாக விளங்கினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 90வது வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி அந்நாட்டில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கியூபாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டாவது ஆகப்பெரிய நகர மான சாண்டியாகோவில் இறுதி மரியாதை நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்களும் உலகத் தலைவர்களும் பங்கேற்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!