போயிங் விமானங்கள் வாங்குவதை ரத்து செய்ய டிரம்ப் விருப்பம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பயன்படுத்துவதற்கு புதிய விமானங்கள் வாங்குவதற்கான ஆர்டரை ரத்து செய்யவிருப்பதாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரசாங்கச் செலவை குறைக்க தாம் விரும்புவதாகவும் இதனால் ஏர் ஃபோர்ஸ் ஒன் போயிங் விமானம் வாங்குவதற்கான குத்தகையை ரத்து செய்ய தாம் எண்ணியிருப்பதாகவும் திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். எதிர்கால அமெரிக்க அதிபர்களுக்காக புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும் ஆனால் அதற்கான செலவு 4 பில்லியன் டாலர் என்பதால் அந்த ஆர்டரை ரத்து செய்யவிருப்பதாகவும் திரு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். திரு டிரம்ப் தற்போது அவரது சொந்த விமானத்தைப் பயன்படுத்தி வருகிறார். ஆனால் அவர் அதிபரான பிறகு வெளிநாடு செல்வதற்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தையே பயன்படுத்துவார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!