பிணையில் எடுக்க மறுத்த தந்தை

பதின்மவயதிலிருந்து தொடர்ந்து பல குற்றங்களைப் புரிந்து பல முறை கைது செய்யப்பட்ட 26 வயது ஹரிதாசை அவரது தந்தை பிணையில் எடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை கொள்ளைக் குற்றத்துக்காகக் கைது செய்யப் பட்டு ஈப்போவில் உள்ள நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்ட தமது மகனைப் பிணையில் எடுக்கப்போவதில்லை என்று திரு வி. மரியதாஸ் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ந்த ஹரி தாஸ் கதறி அழத் தொடங்கி னார். தம்மைப் பிணையில் எடுக்கு மாறு தமது தந்தையிடம் அவர் மன்றாடினார்.

இருப்பினும், திரு மரியதாஸ் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தமது கைபேசி மூலம் ஹரிதாஸ் அவரது தாயாருடன் பேச அவர் ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து ஹரிதாசின் கை களுக்கு விலங்கை மாட்டி போலிசார் கொண்டு சென்றனர். அழுது புரண்ட தமது மகனை மரியதாஸ் இறுதி வரை பிணையில் எடுக்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக தமது மகன் செய்த குற்றங்களுக்கு அபராதம் செலுத்த இதுவரை 20,000 ரிங்கிட் கடன் எடுத்திருப்பதாக மரியதாஸ் சொன்னார். மகன் திருந்தாததால் விரக்தி அடைந்து விட்டதாக அவர் கூறினார்.

தந்தையிடம் அழுது மன்றாடும் ஹரிதாஸ். படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!