அச்சே நிலநடுக்கம்: 102 பேர் மரணம், 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில் புதன்கிழமை ரிக்டர் அளவு 6.5 என பதிவான நிலநடுக்கத்தில் 3,200க்கும் அதிகமானோர் தங்கள் இல்லங் களை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் மரணமடைந்தோர் எண் ணிக்கை 102ஆக உயர்ந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 600 வீடுகள் சேதமடைந்தன என்றும் அந்நாட்டின் தேசிய பேரிடர் நிர்வாக முகவை கூறுகிறது.

இது குறித்து ஜகார்த்தாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத் தில் பேசிய அந்த முகவையின் தகவல் தொகுப்புப் பிரிவின் தலை வர் டாக்டர் சுட்டோபோ நுக்ரோஹோ, பாதிக்கப்பட்ட பகுதி களிலிருந்து மீட்கப்பட்டோரில் 750க்கும் மேற்பட்டோர் காய மடைந்ததாகத் தெரிவித்தார். இதில் 136 பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். "தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 3,276 பேரில் சிலர் அங்கு தொடர்ச்சியாக ஏற்படும் நில அதிர்வுகளால் தங்கள் வீடு கள் எந்நேரமும் இடிந்துபோகலாம் என்ற பீதியில் உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!