அச்சே நிலநடுக்க சேதங்களை சீரமைக்க ஜோக்கோவி உத்தரவு

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அச்சே பகுதியை அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ பார்வையிட்டார். நூற்றுக்கு மேற்பட்டோரைப் பலிவாங்கிய அந்த நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவ மனை யில் சிகிச்சை பெற்று வரும் ஏராளமானோரை அதிபர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நிலநடுக்கத்தால் 11,100 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித் துப் பேசிய அதிபர் ஜோக்கோ, இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் சீரமைக்கப் படும் என்று உறுதியளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் அதிகமானோர் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் அதிபர் ஜோக்கோவி யைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் சிக்லி யில் உள்ள அந்த மருத்துவமனை யின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!