அலெப்போவில் போர் நிறுத்தம்

அலெப்போ: அலெப்போ பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்டு பாது காப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும்பொருட்டு, அப் பகுதியில் சிரியா ராணுவம் தனது தாக்குதலை தற்காலிகமாக நிறுத் திக்கொண்டுள்ளது. அலெப்போ நகரில் தீவிரவாதி கள் சுற்றிவளைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்களில் சுமார் 8,000 பேர் ராணுவத்தின் பாதுகாப்பு வளையத் திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள தாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் அறிவித்துள்ளார். ஜெர்மனியின் ஹேம்பர்க் நக ரில் அமெரிக்க வெளியுறவு அமைச் சர் ஜான் கெர்ரியை சந் தித்தபின் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இதனை அறிவித்தார். ரஷ்யாவின் இந்த அறிவிப்பு நல்ல தொடக்கத்தின் அறிகுறி என்று வர்ணித்துள்ளார் அமெரிக்க வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜோஷ் எர்னெஸ்ட்.

அலெப்போவின் கிழக்கு மாகாணங்களில் இருந்து மீட்கப்பட்ட மக்கள், குழந்தைகளுடனும் உடைமைகளுடனும் அரசாங்கப் படையினரால் மீட்கப்பட்ட இடத்தில் காத்திருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!