ஒபாமா: ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை

வா‌ஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யா தலையிட்ட தாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதியளித்துள்ளார். "நாம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் செய்வோம்" என்று திரு ஒபாமா என்பிஆர் அமெரிக்க வானொலி நிலையத்திற்கு பேட்டி யளித்தபோது கூறியிருக்கிறார். அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் ஹில்லரி கிளின்டனின் முக்கிய உதவியாளரின் மின்னஞ் சல் விவரங்களைக் கணினி ஊடுருவல் மூலம் ரஷ்யா திருடி யிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கணினி ஊடுருவலில் ரஷ்ய அதிபர் புட்டினுக்குத் தொடர்பு இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!