கிழக்கு அலெப்போவிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்ட சுமார் 3,000 பேர்

டமாஸ்கஸ்: கிழக்கு அலெப்போ விலிருந்து மக்களும் போராளி களும் வெளியேற்றப்பட்டு வரும் வேளையில் முதல் நாளான வியாழக்கிழமை சுமார் 3,000 பேர் வெளியேற்றப்பட்டதாக அனைத் துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கிழக்கு அலெப்போவில் இன்னும் 50,000 பேர் சிக்கியிருப்பதாக ஐநா கூறுகிறது. அப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் அனைவரையும் வெளி யேற்ற பல நாட்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஆதரவோடு சிரியா அரசாங்கப் படை ஏறக்குறைய எஞ்சியிருக்கும் அலெப்போவின் எல்லா பகுதிகளையும் கைப்பற்றி யுள்ளது இது, அதிபர் பஷார் அல் ஆசாத்துக்குக் கிடைத்திருக்கும் மிக பெரிய வெற்றியாகும்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் முதல் கட்டமாக அலெப்போவிலிருந்து வெளியேற்றப்பட்டு எதிர்க்கட்சி வசம் உள்ள பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவரை மருத்துவ உதவியாளர் ஒருவர் தூக்கிச் செல்கிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!