13 ராணுவ வீரர்கள் மரணம்; 48 பேர் காயம்

இஸ்தான்புல்: துருக்கியில் நேற்று நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்ததாக அறிவிக் கப்பட்டுள்ளது. துருக்கியின் கேசெரி நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 48 ராணுவ வீரர்கள் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலுக்கு யார் காரணம் என்று இன்னும் தெரிவிக்கப் படவில்லை. பணி நேரத்தில் இல்லாத ராணுவ வீரர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

வெடிகுண்டு தாக்குதலில் பேருந்து வெடித்துச் சிதறியது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ்கள் காயமுற்ற ராணுவ வீரர்களை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றன. தாக்குதலுக்கு உள்ளான பேருந்தில் சாதாரண ராணுவ வீரர்களும் ஆணை பெறாத வீரர் களும் பயணம் செய்து கொண் டிருந்ததாக துருக்கிய ராணுவம் தெரிவித்தது. இந்த ராணுவ வீரர்களுக்கு நேற்று விடுப்பு என்றும் அவர்கள் உள்ளூர் சந்தைக்கு சென்று கொண்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதலில் பேருந்து வெடித்துச் சிதறியதைக் கண்டு அந்த இடத்தில் இருந்த பொதுமக்களிடையே பதற்றம் நிலவியது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!