ஏமனில் தாக்குதல்: 42 வீரர்கள் மரணம்

ஏடன்: ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடனில் ராணுவ வீரர்கள் கூடியிருந்த இடத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி தாக்குதலில் ஈடுபட்டதில் குறைந்தது 42 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். ஏடன் நகரின் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் வட்டார ராணுவ தலைமையகத்தில் நேற்று சம்பளம் வாங்குவதற்காக பல வீரர்கள் ஒன்று கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தினுள் நுழைந்த ஒரு பயங்கரவாதி தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்ட தாகவும் பொதுமக்கள் உள்பட குறைந்தது 60 பேர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.

ஏமனில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன் தன் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் ராணுவ வீரர்கள் 42 பேர் உயிரிழந்தனர். அந்த இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!