இந்தோனீசிய விமான விபத்தில் 13 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனீசிய ராணுவ விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் சென்ற 13 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்தோனீசியாவின் பாப்புவா மாநிலத்தில் டிமிகா நகரிலிருந்து வாமெனா என்ற இடத்திற்குப் புறப்பட்ட ஹெர்குலஸ் சி-130ரக விமானம் திட்டமிட்டபடி தரை இறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக புறநகர் மலைப் பகுதியில் விழுந்து நொறுங் கியதாக ஆயுதப் படைத் தலைவர் அகுஸ் சுப்ரியாட்னா கூறியுள்ளார்.

இந்தக் கோர விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 3 விமானிகளும் 10 ராணுவ வீரர் களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் சொன் னார். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அப்பகுதியில் காணப்பட்ட மேக மூட்டம் காரணமாக விபத்து நேர்ந்திருக் கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ராணுவ வீரர்கள் சோதனை செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!