குற்றச்சாட்டுகளை மறுத்த தென்கொரிய மாது

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹையின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள் ளார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள தாகவும் 60 வயதான சோய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. சோய் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள் ளனர். ஊழல் விவகாரத்தில் சோய் ஈடுபட்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அதிபர் பார்க் பல்வேறு நெருக்குதலுக்கு உள்ளானார். தற்காலிகாக அவர் பதவி இழந்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு வந்த சோய் சூன் சில். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!