சந்தைக்குள் லாரி ஓட்டிச்சென்று தாக்கிய பாகிஸ்தான் அகதி: 12 பேர் பலி, பலர் காயம்

ஜெர்மன் தலைநகர், பெர்லினின் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கறுப்பு நிற கனரக லாரி ஒன்றை ஓட்டி வந்தவன் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாடக் குழுமியிருந்த மக்கள் மீது தாறுமாறாக மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளான். அந்த கோரத் தாக்குதலில் 12 பேர் உயிர் இழந்தனர். 48 பேர் காயமடைந்தனர். அவர் கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். லாரியை ஓட்டியவன் கைதுசெய்யப் பட்டு விசாரிக்கப்படுவதாக பெர்லின் போலிஸ் கூறியது. 23 வயதாகும் அவன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் பிப்ரவரி மாதம் பெர்லினுக்கு அகதியாக வந்த அவன் பெயர் 'நேவ்ட் பி' என்றும் ஜெர்மன் ஊடகச் செய்திகள் கூறின.

அவன் தங்கியிருந்ததாக நம்பப்படும் பெர்லின் விமான நிலையத்துக்கு அருகே யுள்ள அகதி முகாமில் போலிசார் சோதனை நடத்துவதாகவும் செய்திகள் தெரிவித்தன. ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் "பொதுமக்கள் அதிகமாகக் கூடும் சந்தையில் மோதியவன் வேண்டுமென்றே பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது," என்றார். "நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். அதிர்ச்சி அடைந்துள்ளேன். மிகுந்த கவலை அடைந்துள்ளேன்," என்று கூறிய அவர் "நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது," என்றார். "இதுபற்றி இன்னும் முழுமையாகத் தெரியாதநிலையில், இப்போதுள்ளவற்றை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு பயங்கர வாதத் தாக்குதல் என்று எண்ணத் தோன்றுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்

தாக்குதல் நடத்த பயன்படுத்தப் படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் நிரம்பிய பெரிய கறுப்பு நிற லாரி. லாரி மோதியதில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அருகில் விழுந்து கிடக்கிறது. தாக்குதலைத் தொடர்ந்து ஜெர்மனி நேற்று கிறிஸ்துமஸ் சந்தைகளை மூடியது. நாடெங்கும் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகள், கடைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!