மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து: குறைந்தது 31 பேர் பலி, பலர் காயம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள மிகப் பெரிய பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 31 பேர் பலியானதாகவும், 70 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் புறநகரான துல்டிபெக் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு விற்பனை சந்தையில் செவ்வாய்க் கிழமை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், அந்தச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் மூண்ட தீ அங்கிருந்த பல கடைகளுக்கு பரவியதாகக் கூறப்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. பொதுவாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் பட்டாசு களைக் கொளுத்தி வாண வேடிக்கை நடத்துவது வழக்கம். தற்போது விழாக்காலம் நெருங் கும் வேளையில் மெக்சிகோ சந்தையில் ஏராளமான ரக பட்டாசு கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. அவற்றை வாங்க மக்கள் கூடியிருந்த நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.

மெக்சிகோவில் உள்ள ஒரு பட்டாசு விற்பனை சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏராளமான பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் மூண்ட தீ அங்கிருந்த எல்லா கடைகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!