பசிபிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை மீட்டெடுக்க ஆசிய நாடுகள் உறுதி

'டிபிபி' என்று சுருக்கமாக அழைக் கப்படும் பசிபிக் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன் பாட்டிலிருந்து அமெரிக்கா வில கியதால் ஆசிய நாடுகள் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந் தும் உடன்பாட்டைக் காப்பாற்றமுடியும் என்று நம்பிக்கை தெரி வித்துள்ளன. சீனாவையும் மற்ற ஆசிய நாடு களையும் சேர்ப்பதன் மூலம் 'டிபிபி' உடன்பாட்டுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று இரு நாடுகளின் தலைவர்கள் கூறினர். அமெரிக்காவின் முன்னைய அதிபர் ஒபாமா 'டிபிபி' உடன் பாட்டுக்கு முக்கியத் தூணாக விளங்கினார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள் ளது. ஆனால் இதுவரை 'டிபிபி' உடன்பாடு அமலுக்கு வரவில்லை. இதில் இடம்பெற்றுள்ள மற் றொரு நாடான ஜப்பானின் பிர தமர் ‌ஷின்சோ அபே, டிபிபியை பொருளியலைத் தூண்டும் இயந் திரமாக வர்ணித்திருந்தார்.

சீனாவுக்கும் 'டிபிபி' சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி திங்கட்கிழமை அன்று 'டிபிபி'லிருந்து வெளியேறும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனால் அமெரிக்காவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. ஜப்பான் பிரதமர் அபே, நியூ சிலாந்து பிரதமர் பில் இங்கிலிஷ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரிடம் பேசியதாகக் கூறிய ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல், அமெரிக்கா இல்லாத டிபிபியை அமல்படுத்தும் சாத்தியங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!