உளவுத் துறை தலைவரானார் மைக் போம்பியோ

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் உளவுத் துறைத் தலைவராக திரு மைக் போம்பியோ பதவி ஏற்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று அவர் சிஐஏ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். திரு டிரம்ப்பின் அமைச்சரவையில் மூன்றாவதாக பதவி ஏற்றுக்கொண்டிருப்பவர் திரு போம்பியோ ஆவார். புதிய அமைச்சரவையில் இதுவரை மூன்று பேர் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சராக ஜேம்ஸ் மெத்திஸ் பதவி ஏற்றார். உள்துறை அமைச்சராக ஜான் கெல்லி பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்க ராணுவ அதிகாரி யான 53 வயது போம்பியோ உளவுத் துறைத் தலைவர் பதவியை ஏற்பதற்கு ஆதரவாக செனட் உறுப்பினர்கள் 66 பேர் வாக்களித்தனர். ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

உளவுத் துறை தலைவராக மைக் போம்பியோ பதவி ஏற்றுக் கொள்கிறார். (இடது) அவருக்குப் பக்கத்தில் அவரது மனைவி சூசன் போம்பியோ. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!