மலேசியா: ஒன்பது மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

மலேசியாவின் பல மாநிலங்கள் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயி ரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். ஜோகூர், சிலாங்கூர், பேராக், மலாக்கா, கிளந்தான், சாபா, சரவாக், பாஹாங், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளை வெள் ளம் மூழ்கடித்துள்ளது. திடீர் வெள்ளம் ஏற்பட்டு, தங்கள் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பேராக் மாநிலத்தின் நான்கு மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 400 பேர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

அம்மாநிலத்தில் உள்ள கடலோர நகரமான பன்டாய் ரெமிஸ் வெள்ளத் தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு கம்போங் கிள்ளான், கம்போங் புலாவ் மெராந்தி, தாமான் அங்கெரிக் பெர்மாய், ஜாலான் சித்திய வான், கம்போங் காசி, கம்போங் பாயா அரா ஆகிய பகுதிகளில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு நீர் ஓடுகிறது. சிலாங்கூரில் கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்து பெய்து வரும் கனமழையால் 45 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் நிவாரண முகாம் களுக்கு இடம்பெயர்ந்தனர். இரு நாட்களாக மழை கொட்டித் தீர்ப்பதால் மலாக்கா மாநிலத்தில் வெள்ள, பேரிடர் நிர்வாகக் குழு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலம், தாமான் சுங்கை கெமாசில் உள்ள தமது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததை அடுத்து பொருட்களைச் சற்று உயரமான இடத்தில் எடுத்து வைக்கும் திருவாட்டி கமலா. படம்: பெர்னாமா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!