சுவர் எழுப்ப மெக்சிகோ நிதி வழங்காது

மெக்சிகோ சிட்டி: அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு மெக்சிகோ தரப்பில் நிதி எதுவும் வழங்கப்போவதில்லை என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நியேடோ கூறியுள்ளார். மெக்சிகோ, அமெரிக்க எல்லையில் தடுப்புச் சுவர் ஒன்று கட்டும் திரு டிரம்பின் திட்டத்திற்கு திரு என்ரிக் கண்டனம் தெரி வித்தார். எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய திரு என்ரிக், அத்திட்டம் குறித்து தாம் வருந்துவதாகவும் கூறியுள் ளார்.

அத்திட்டத்தில் மெக்சிவோக்கு உடன்பாடு இல்லை என்று அவர் சொன்னார். அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்பை சந்திக்க திரு என்ரிக் இம்மாதம் 31ஆம் தேதி வா‌ஷிங்டன் செல்லவிருந்தார். இந்நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் திரு டிரம்ப், மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் தடுப்புச் சுவர் ஒன்றை கட்டுவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். திரு டிரம்ப்பின் இந்த நடவடிக்கை மெக்சிவோவுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

வா‌ஷிங்டன் பயணத்தையும் திரு டிரம்ப்பை சந்தித்துப் பேசுவதையும் ரத்து செய்யுமாறு என்ரிக் பினா நியேடோவுக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. எல்லை சுவர் எழுப்பும் திரு டிரம்ப்பின் திட்டத்தை மெக்சிகோவில் உள்ள எதிர்க் கட்சியினரும் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!