ஜப்பானுடன் வர்த்தக உடன்பாடு; டோனல்ட் டிரம்ப் விருப்பம்

வா‌ஷிங்டன்: ஆசிய பசிபிக் நாடுகளின் தடையற்ற வர்த்தக உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ள வேளை யில் ஜப்பானுடன் இருதரப்பு வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள அதிபர் டிரம்ப் விரும்புவதாக டிரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார். அடுத்த மாதம் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே வா‌ஷிங் டனுக்கு வருகையளிக்கும்போது இருதரப்பு வர்த்தக உடன்பாடு காணப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. திரு அபே எப்போது அமெரிக்கப் பயணம் மேற்கொள் கிறார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி திரு அபே வா‌ஷிங்டன் வருவார் என்று எதிர்பார்க்கப் படுவதாக ஜப்பானிய ஊடகத் தகவல்கள் கூறின. இந்நிலையில் ஜப்பானியப் பிரதமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!