அதிபர் டிரம்ப்பை பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திரு டிரம்ப்பையும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களையும் பாராட் டினார். அதே சமயம் டிரம்ப் நிர்வாகத் தினருக்கு கடுமையான சில செய்திகளை அவர் அறிவுறுத் தினார். ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டை திரு டிரம்ப் கைவிடக்கூடாது என்ற செய்தியை திருவாட்டி மே முன்வைத்தார். அத்துடன் நேட்டோ போன்ற அனைத்துலக அமைப்புகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நேற்று பின்னேரம் திரு டிரம்ப்பை திருவாட்டி தெரேசா மே சந்திக்கவிருந்தார். திரு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின்னர் அவர் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தெரேசா மே ஆவார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!