டிரம்ப் குடிநுழைவு உத்தரவுக்கு குறுக்கே அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் குடிநுழைவுக் கொள்கைகளை மாற்றுகிறார். அதன்படி அமெரிக்காவுக்குள் அடுத்த 120 நாட்களுக்கு அகதி கள் யாருக்கும் அனுமதி கிடை யாது. ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 90 நாட்களுக்கு விசா கிடையாது என்று கூறும் அமலாக்க உத்தரவுகளில் அதிபர் கையெழுத்திட்டு இருக்கிறார்.

என்றாலும் இந்த உத்தரவை எதிர்த்து நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 'அமெரிக்க சிவில் உரிமைகள்' என்ற அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமெரிக்க அதிபரின் உத்தரவிற்குத் தற்காலிக மாக தடைவிதித்தது. அதிபர் டிரம்ப் உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்னதாக முறையான விசாக்களைப் பெற்று அமெரிக்காவிற்கு வந்து விமான நிலையங்களில் தரை இறங்கிய வர்கள், அகதி பத்திரங்களுடன் வந்தவர்கள், நீதிமன்ற உத்தரவு காரணமாக தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதிபர் டிரம்ப் உத்தரவை எதிர்த்து அமெரிக்கா வின் டெக்சாஸ் மாநில டல்லாஸ் விமான நிலையத்தில் கூடிய ஆர்ப்பாட்டக் காரர்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!