பெண் பக்தர்களை எச்சரித்த தைப்பூச ‘சாயத்தெளிப்புக் கும்பல்’ பேர்வழி கைது

நடக்கும் தைப்பூசக் கொண்டாட்டத் தின்போது அந்த இந்து சமயப் பெருவிழாவிற்கு ஏற்ற வகையில் பெண்கள் உடை அணிந்து வர வேண்டும் என்றும் அப்படி வராமல் கண்டபடி உடை அணிந்து வரு வோர் மீது சாயம் தெளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்த ஒரு குழுவை உருவாக்கிய ஆசாமியை சிலாங்கூர் போலிஸ் கைது செய்து இருக்கிறது. 'தைப்பூச சாயம் தெளிப்புக் கும்பல்' என்று குறிப்பிடப்படும் ஓர் அமைப்பை உருவாக்கியவர் என்று கூறப்படுகின்ற 29 வயது ஆடவர் வியாழக்கிழமை இரவு சுமார் 9.20 மணிக்கு செபராங் ஜயாவில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் சமாமாட் தெரிவித்து உள்ளார்.

அந்தச் சந்தேகப்பேர்வழியிடம் விசாரணை நடத்தவேண்டி இருப்பதால் அவரை விசாரணைக் காவலில் வைக்க அனுமதிக்கக் கேட்டு தாங்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும் அவர் சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சாயம் அடிப்புக் குழு ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்களை எச்சரித்து இருந்தது. அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடக்கும் தைப்பூச விழாவின்போது பொருத்தமான உடைகளை அணிந்து வர வேண்டும் என்று அந்தக் குழு கேட்டுக்கொண்டது. பலவிதமான ரவிக்கைகளுடன் கூடிய பெண்களின் முதுகுப் பக் கத்தைக் காட்டும் பல படங்களை வெளியிட்டு இப்படி எல்லாம் வரக்கூடாது என்று பெண்களை அந்தக் குழு எச்சரித்து இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!