போதைப்பொருளுக்கு எதிரான கடும் நடவடிக்கை நிறுத்திவைப்பு

மணிலா: போதைப்பொருள் சந்தேக நபர்கள் மீது பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் எடுத்துவந்த கடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்நாட்டுப் போலிசார் தெரிவித்துள்ளனர். முதலில் போலிஸ் படையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அப்புறப்படுத்த வேண்டியிருப் பதாகவும் அதன் பின்னர் போதைப்பொருள் சந்தேக நபர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கையை தொடங்க இருப் பதாகவும் போலிஸ் படைத் தலைவர் ரோனல்ட் டிலா ரோசா கூறினார். போலிஸ் தலைமை யகத்தில் தென்கொரிய வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலிசாரின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பிலிப்பீன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டுட்டர்டே பதவி ஏற்றது முதல் போதைப் பொருள் சந்தேக நபர்களுக்கு எதிராக போலிசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இத்தகைய நடவடிக்கைகளில் இதுவரை 7,000 பேர் கொல் லப்பட்டனர். திரு டுட்டர்டேயின் இந்த கடும் நடவடிக்கைக்கு மனித உரிமை குழுக்களும் மேற்கத்திய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!