சிவசேனா: ராமர் கோயில் கட்டாதது ஏன்

மும்பை: தேர்தல் நெருங்கும்போது மட்டும் ராமர் கோயில் விவ காரத்தை கையில் எடுக்கும் பார திய ஜனதா, இதுவரை அயோத் தியில் ராமர் கோயில் கட்டாதது ஏன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியிருக்கிறார். மத்திய அரசாங்கத்திலும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. இருந்தாலும் பாஜகவுடன் அது மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதனால் பாரதிய ஜனதா தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா மிரட்டிப்பணம் பறிக்கும் கும்பல் எனக் கடுமையாக விமர் சித்திருந்தார். இதற்கு பதிலடித் தரும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "தேர்தல் நெருங்கும் போது மட்டுமே அயோத்தி விவ காரத்தை பாரதிய ஜனதா எழுப்பு கிறது," என்றார். "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று மட்டும் பாஜக தெரிவிக்கிறது. ஆனால் அதற் கான எந்த நடவடிக்கையையும் அக்கட்சி எடுக்கவில்லை. இதுவரை ராமர் கோயில் கட்டாதது ஏன்," என்று உத்தவ் கேட்டார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!