ஐஎஸ் தொடர்புடைய மூவர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். பாகாங்கிலும் கோலாலம்பூரிலும் ஜனவரி 27ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனைகளின்போது அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். அந்த மூவரில் ஒருவர் குவாந்தானில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் இந்தோனீசிய குடியுரிமை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவர் தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி ஆவார். மூன்றாவது நபர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார். அவர் ஐஎஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!