இணையத்தில் பாலியல் உரையாடல்; சமயப் போதகரிடம் போலிசார் விசாரணை

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கொள்கைகளையும் இந்தோனீசிய முன்னாள் அதிபர் சுகர்னோவை யும் அவமதித்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சமய போதகர் ஹபிப் ரிஸிக் ‌ஷிஹாப் மீது புதிய புகார் கூறப்பட்டுள்ளது. இணையத்தில் பாலியல் உரையாடலில் அவர் சம்பந்தப் பட்டிருப்பதாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் போலிசார் அவரை விசாரித்து வருகின்றனர். இஸ்லாமியக் குழுவின் தலை வரான ஹபிப் ரிஸிக், மற்றொரு பெண்ணுடன் பாலியல் உரை யாடலில் ஈடுபட்டதாக மாணவர் குழு ஒன்று போலிசாரிடம் புகார் செய்துள்ளது. அத்தகைய உரை யாடலில் அவர் ஈடுபட்டதைக் காட்டும் புகைப்படங்கள் இணை யத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய தற்காப்பாளர்கள் முன்னணி எனும் குழுவின் தலைவர் ஹபிப் ரிஸிக், போலிசாரின் விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!