டிரம்ப் சாடல்: அமெரிக்காவை ஆபத்தில் தள்ளுகிறார் நீதிபதி

ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந் தோர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து தான் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை தொடருவதால் அமெரிக்கா வுக்குள் நுழையும் மக்களை மிகவும் கவனத்துடன் சோதிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இடைக் காலத் தடை விதித்த நீதி மன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளைப் பாதுகாக்கும் நட வடிக்கையைக் கடினமாக்கு வதாகவும் அவர் குறிப்பிட்டுள் ளார். தடை விதித்த நீதிபதி அமெரிக்காவை ஆபத்தில் தள்ளுவதாகவும் திரு டிரம்ப் குறைகூறியுள்ளார். அமெரிக்காவில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால்தமது உத்தரவுக்கு எதிராகச் செயல் பட்ட நீதிபதியும் நீதிமன்றங்களும் தான் அதற்குக் காரணமாகும் என்றார் அவர்.

முன்னதாக, இடைக்காலத் தடையை நீக்கி ஏழு முஸ்லிம் நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை உயிர்ப்பிக்குமாறு அமெரிக்க அரசால் விடுக்கப்பட்ட கோரிக் கையை ஏற்றுச் செயல்பட மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது. இந்த மறுப்பு குறித்து அதிபர் டிரம்ப் பதில் எதுவும் கூறவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!