ரஷ்யாவில் குடும்ப வன்முறைக் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. அதற்­கான சட்டம் நேற்று முன்தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தின் மூலம், வன்முறையில் ஈடுபட்ட­வர்கள் உறவினர்களாக இருப்பின் அது குற்றவியல் குற்றமாகக் கருதப்படாமல் சிவில் குற்றமாகக் கருதப் படும். அதே சமயம் பெரிய காயம் ஏற்படும் வகையில் அந்தக் குற்றம் இருப்பின் அது குற்றவியல் சார்ந்த குற்றமாகவே கணக்கில் கொள்ளப்படும். முன்­பிருந்த சட்டத்தின்படி குடும்ப வன்முறைக் குற்றங்களுக்கு கூடிய பட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்­கப்படும்.

இந்தப் புதிய சட்டம் குற்றம் புரிவோருக்­குச் சாதகமாக உள்ளது என்றும் இதனால் குடும்ப வன்முறை பற்றி போலி­சில் கூறப்படும் புகார்கள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. தண்டனை குறைக்கப்பட்டதால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ள­தாக­வும் விமர்சிக்கப்படு­கிறது. ரஷ்யாவில் ஆண்டுதோறும் 14,000 பெண்கள் கணவன், உறவினர்களின் வன்முறையில் கொல்லப்படுகின்றனர் என்கிறது ஐநா 2010ல் வெளியிட்ட அறிக்கை என்று கூறுகிறது கார்டியன் இதழ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!