ஜான் கெல்லி: அமெரிக்க மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும்

வா‌ஷிங்டன்: ஏழு இஸ்லாமிய நாடுகளின் குடியேறிகளுக்கான அதிபரின் தடை அவசர­மாக எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் அதன்மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. இந்தத் தடையை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதில் நீதிமன்றத்துடன் ஆன சவாலில் நிச்சயம் அமெரிக்க நீதித் துறைக்கே வெற்றி கிட்டும் என்று பேசியுள்ளார் அந்நாட்டின் உள்துறை பாதுகாப்பு அமைச்சர் ஜான் கெல்லி.

"இந்தத் தடையை சற்று சுணக்கியிருக்கலாம். அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்­கள், தலைவர்களிடம் ஒன்றுகூடி இதுபோன்று பேசியிருக்க வேண்­ டும். அப்போதுதான் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய பின்பு நிகழ்வதை எதிர்கொள்ள அவர்களால் தங்களைத் தயார்ப்­படுத்திக்கொண்டிருக்க முடியும் என்று பாதுகாப்புத் துறையின் குழுவின் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார் திரு ஜான் கெல்லி.

அதிபர் டிரம்ப் அமல்படுத்திய குடியேறிகளுக்கான தடை இஸ்லா­மி­யர்களுக்கான தடை அல்ல, நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடாமல் அமைதியைக் கட்டிக்காக்கும் ஆணை. இது காலத்திற்கேற்ற தேவையான நடவடிக்கை என்றே கூறவேண்டும். நேற்று முன்தினம் சான்பிரான்­சிஸ்கோவில் உள்ள மேல்­ முறை­யீட்டு நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், சியாட்டல் மாவட்ட நீதிமன்றம் இந்தத் தடையை நடைமுறைப்படுத்துவதற்குத் தடை விதித்ததைக் குடிநுழைவு வழக்கறிஞர்களும் குடியேறிகளும் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்று நீதித்­துறை தரப்பில் வாதிடப்பட்டது.

அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சர் ஜான் கெல்லி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!